17 பிப்ரவரி 2012

நற்செயல் #4



فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُون
"அவர்களுடைய இதயங்களில் நோயுள்ளது. ஆகவே அந்நோய்யை அவர்களுக்கு அல்லாஹ் அதிகபடுதிவிட்டான். மேலும் அவர்கள் பொய் சொல்லிகொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு."                                                                                                                   [2:10]

பொய். இரண்டு எழுத்து வார்த்தை, ஆனால் எல்லா பாவங்களின் அடிப்படை. நம் நாவினால் ஏற்படும் மிக பெரிய பாவம். உங்களால் ஒரு பொய்யோடு நிறுத்த முடியுமா? பொய் சொல்வது முனாபிக் உடைய குணம். முனாபிகீன்கள் நரகத்தின் அடிமட்டத்தில் இருப்பார்களாம். Navudubillah! 

உண்மை பேசுவதில் மனதிற்கு கிடைக்கும் இனிமையே தனி. உண்மை பேசுவதால் நல்லது தான் நடக்கும். அது உங்கள் மூளைக்கு புலப்படவில்லை என்றாலும். ஒரு வெள்ளை தாள் எடுத்து உங்கள் கப்போர்ட்-ல் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பொய் சொல்லும் நேரமெல்லாம் அதில் ஒரு கருப்பு புள்ளி வையுங்கள். அந்த வெள்ளை காகிதம் தான் உங்கள் இதயம். 

முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்விடம் முயற்சி செய்தேன் என்றாவது சொல்லாலமே? إن شاء الله






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக