30 ஜனவரி 2013

நற்செயல் # 7وَالْعَصْرِ.  إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
    காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் பெரும் நஷ்டத்தில்  இருக்கிறான்  [103:1-2]

துன்யா (நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்) ==> கபுர் (முன்கர் & நகீர் மலக்குகளின் கேள்வி நேரம்) ==> கியாமத்து நாள் (50000 வருடங்கள்)    ==> கேள்வி கணக்கு நேரம் (ஹிசாப்) ==> உங்களுடய புத்தகத்தை பார்ப்பது ==> மீஜானில் உங்களுடய அமல்கள் அளக்கப்படும் ==> நபி (ஸல்) அவர்களுடைய கௌதரில் தாகம் தீர்ப்பது ==> சீராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடப்பது ==> கந்தராவில் உங்களால் பறிக்கபட்ட உரிமைகளை மக்களுக்கு திருப்பித்தருவது ==> சொர்க்கம் நுழைவது

அப்பொழுது அவர்களிடம் கேட்கப்படும்: "நீங்கள் எவ்வளவு நாள் உலகத்தில் வாழ்ந்தீர்கள்?"

அவர்களுடைய பதில் : "ஒரு மணி நேரம்" 

ஆகவே இந்த அற்ப ஒரு மணிநேரத்திற்காக நாம் ஏன் நம்முடைய நிறந்தற தங்குமிடத்தை கைவிட்டு நழுவவிடணும்? ஒரு மணிநேரமா அல்லது முடிவில்லா சந்தோஷமா, choice உங்கள் கையில்.

29 ஜனவரி 2013

அறிவிப்பு!!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே! 
 அனைவரும் அல்லாஹ் உடைய கிருபையில் நலமுடன் பலமான ஈமானுடன் இருந்துவர துஆ செய்கிறேன். ஆமீன். என்னுடைய பதிவுகளை படித்து வந்ததற்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ். நான் பல மாதங்களாக எதுவும் இங்கே பதிவு செய்யவில்லை என்றும் அறீவீர்கள். பல வேலைகள் வந்ததால் இந்த பிளாகில் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும் :)

இனிமேல் தொடர்ந்து பதிவு செய்வேன். இன் ஷா அல்லாஹ்! நீங்களும் படித்து மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

جزاك اللهُ خيراً

     ♥

02 மே 2012

நற்செயல் #6

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ
- [2:164]


" நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறிகொண்டிருப்பதிலும், மனிதர்களுக்கு பயன் தரும் கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கிவைத்து பூமியை உயிராகிவைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான பிராணியை பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை திருப்பிவிட்டு கொண்டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமூகத்தவர்களுக்கு சான்றுகள் இருக்கின்றன"-


                         SUBHANALLAH!! ரோபோட் மனிதர்களாக இல்லாமல் உங்கள் தலைக்கு மேல் உள்ள வானத்தை பாருங்கள்! உங்களை படைத்தவனை நீங்கள் உணர்வீர்கள்!

20 பிப்ரவரி 2012

நற்செயல் #5


  لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا                                      
"நீங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள் ; 
இன்னும் மனிதர்களுக்கு அழகானதை சொல்லுங்கள்"   [2:83]

நீங்கள் உங்கள் பாவங்களை கட்டுபடுத்த வேண்டுமா? உங்கள் நாவினை கட்டுபடுத்துங்கள். நபி மொழி- "எவர் ஒருவர் தன் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதை பாதுகாக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் நிச்சயம்"  

இந்த காலகட்டத்தில் நிறைய பேசுவது ஒரு trend-ஆக மாறிவிட்டது. அதிலிலும் நல்ல வார்த்தைகள் அரிது. எத்தனை கெட்ட வார்த்தைகள் நம் உரையாடலில்! கிராமன் காதீபீன் பாவம்!

யோசியுங்கள்~ கியாம நாள் அன்று நாம் சொன்ன கெட்ட வார்த்தை பக்க பக்கமாக காண்பிக்க படும்போது, 

stupid      idiot
stupid      
idiot 
stupid    
idiot
stupid     idiot 
stupid     idiot 
stupid     idiot
''             ''
''             ''
நம் நிலைமை என்ன? 

அந்நாள் வரும்முன், உங்களை நீங்களே check செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் பயன் படுத்தும் கெட்ட வார்த்தையை note செய்யுங்கள். அன்று அதனை எத்தனை முறை சொன்னீர்கள் என்றும் எழுதுங்கள். பொய் சொன்னீர்களா, எழுதுங்கள். புறம்பேசுநீர்களா, எழுதுங்கள். நல்ல விஷயங்கள் (அல்லாஹ்வை நினைவுகூர்ந்து ) பேசுநீர்களா? எழதுங்கள். 

நிச்சயமாக, மாற்றத்தை உணர்வீர்கள்.
உங்களுக்கு எளிமையான வழி வேண்டுமா?  - "பேசுவதை குறையுங்கள்"!!                                                                             

17 பிப்ரவரி 2012

நற்செயல் #4فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُون
"அவர்களுடைய இதயங்களில் நோயுள்ளது. ஆகவே அந்நோய்யை அவர்களுக்கு அல்லாஹ் அதிகபடுதிவிட்டான். மேலும் அவர்கள் பொய் சொல்லிகொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு."                                                                                                                   [2:10]

பொய். இரண்டு எழுத்து வார்த்தை, ஆனால் எல்லா பாவங்களின் அடிப்படை. நம் நாவினால் ஏற்படும் மிக பெரிய பாவம். உங்களால் ஒரு பொய்யோடு நிறுத்த முடியுமா? பொய் சொல்வது முனாபிக் உடைய குணம். முனாபிகீன்கள் நரகத்தின் அடிமட்டத்தில் இருப்பார்களாம். Navudubillah! 

உண்மை பேசுவதில் மனதிற்கு கிடைக்கும் இனிமையே தனி. உண்மை பேசுவதால் நல்லது தான் நடக்கும். அது உங்கள் மூளைக்கு புலப்படவில்லை என்றாலும். ஒரு வெள்ளை தாள் எடுத்து உங்கள் கப்போர்ட்-ல் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பொய் சொல்லும் நேரமெல்லாம் அதில் ஒரு கருப்பு புள்ளி வையுங்கள். அந்த வெள்ளை காகிதம் தான் உங்கள் இதயம். 

முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்விடம் முயற்சி செய்தேன் என்றாவது சொல்லாலமே? إن شاء الله


15 பிப்ரவரி 2012

நற்செயல் #3

Alhamdulillah

  وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
"அன்றியும் உங்கள் இரட்சகன் கூறுகிறான்: நீங்கள் நன்றி செலுத்தினால் என் அருளை நிச்சயமாக உங்களுக்கு அதிகபடுத்துவேன், இன்னும் நீங்கள் மாறு செய்தீர்களானால், நிச்சயமாக என்னுடைய வேதனை மிக கடினமானது"                                                                                          [14:7]

முதலில் ஒரு கேள்வி : இன்னைக்கு எத்தனை முறை الحمد لله சொல்லி இருக்கிறீர்கள்? ஒரு முறை கூட இல்லை என்றால் உங்கள் வாழ்க்கை தவறான பாதையில் செல்கிறது. அல்லாஹ்வின் அருளினால் அன்றியே தவிர நம்மால் ஒரு விநாடி கூட சுவாசிக்க முடியாது! அப்படி இருக்க நாம் என்ன நன்றி கெட்டவர்களாக ஆகிவிட்டோமா ?
வயிறு நிறைய உணவும் தலைக்கு கிழே தலையணையும் உடல் மேலே போர்வையும் இருக்க இருப்பிடம் நன்றி செலுத்த நாவையும் தந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்! 

இன்றே الحمد لله சொல்லி வித்தியாசத்தை உணறுங்கள்! 14 பிப்ரவரி 2012

நற்செயல் #2


وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
"மேலும் அவனுடைய வசனங்கள் ஓதி காண்பிக்கபட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகபடுத்தும் அவர்கள் தங்கள் இரட்சகன் மீது நம்பிக்கை வைப்பார்கள் " [8:2]

அல்லாஹ் த'அலா நமது நபி ரசூலே கரீம் (ஸல்) அவர்களுக்கு தந்த ஓர் அழகிய அற்புதம் குர்'ஆன்! அதை நாம் தினம் ஒரு வரியாவது புரிந்து ஓதினால் நம் ஈமான் வளரும். அல்லாஹ் அவனுடைய குர்'ஆன் மூலம் நம் வாழ்கையில் பேசுவான். நம் செயல்கள் அனைத்தும் நம் கண்முன்னே மாறும்! அல்லாஹ்வை பற்றி தெரிய வேண்டும் என்றால் அவனுடைய குர்'ஆணை படியுங்கள். உனக்காக இறங்கிய குர்'ஆனில் என்ன இருக்கிறது என்று உனக்கு அறிய ஆசை இல்லையா? உன்னை படைத்தவனை பற்றி அறிய வேண்டாமா?