30 ஜனவரி 2013

நற்செயல் # 7



وَالْعَصْرِ.  إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
    காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் பெரும் நஷ்டத்தில்  இருக்கிறான்  [103:1-2]

துன்யா (நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்) ==> கபுர் (முன்கர் & நகீர் மலக்குகளின் கேள்வி நேரம்) ==> கியாமத்து நாள் (50000 வருடங்கள்)    ==> கேள்வி கணக்கு நேரம் (ஹிசாப்) ==> உங்களுடய புத்தகத்தை பார்ப்பது ==> மீஜானில் உங்களுடய அமல்கள் அளக்கப்படும் ==> நபி (ஸல்) அவர்களுடைய கௌதரில் தாகம் தீர்ப்பது ==> சீராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடப்பது ==> கந்தராவில் உங்களால் பறிக்கபட்ட உரிமைகளை மக்களுக்கு திருப்பித்தருவது ==> சொர்க்கம் நுழைவது

அப்பொழுது அவர்களிடம் கேட்கப்படும்: "நீங்கள் எவ்வளவு நாள் உலகத்தில் வாழ்ந்தீர்கள்?"

அவர்களுடைய பதில் : "ஒரு மணி நேரம்" 

ஆகவே இந்த அற்ப ஒரு மணிநேரத்திற்காக நாம் ஏன் நம்முடைய நிறந்தற தங்குமிடத்தை கைவிட்டு நழுவவிடணும்? ஒரு மணிநேரமா அல்லது முடிவில்லா சந்தோஷமா, choice உங்கள் கையில்.

29 ஜனவரி 2013

அறிவிப்பு!!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே! 
 அனைவரும் அல்லாஹ் உடைய கிருபையில் நலமுடன் பலமான ஈமானுடன் இருந்துவர துஆ செய்கிறேன். ஆமீன். என்னுடைய பதிவுகளை படித்து வந்ததற்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ். நான் பல மாதங்களாக எதுவும் இங்கே பதிவு செய்யவில்லை என்றும் அறீவீர்கள். பல வேலைகள் வந்ததால் இந்த பிளாகில் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும் :)

இனிமேல் தொடர்ந்து பதிவு செய்வேன். இன் ஷா அல்லாஹ்! நீங்களும் படித்து மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

جزاك اللهُ خيراً

     ♥